Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.

உணவு மற்றும் மீட்புதவிகளை வழங்க, தங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு, உதவிகளை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆண்கள் கூறுவதாக மீட்புதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

தாங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்கியே உதவிப் பொருட்களைப் பெற்று வந்ததாக பிறர் கருதுவார்கள் என்பதால் பல பெண்கள் உதவி மையங்களுக்கு செல்வதையே தவிர்க்கின்றனர். உணவு மற்றும் தங்குமிடம் தேவைப்படும் பெண்களும் சிறுமிகளும் அதிகாரிகளின் பாலியல் தேவைகளுக்காக குறுகிய கால திருமணம் செய்துகொள்வதாகவும், எச்சரிக்கையையும் மீறி இத்தகைய சுரண்டல்கள் சிரியாவின் தெற்கில் நடப்பதாகவும், ஆண் பாதுகாவலர்கள் இல்லாத, கணவரை இழந்த பெண்கள், மண முறிவு செய்துகொண்டவர்கள், உள்நாட்டுப் போரால் வேறு இடங்களில் சென்று வசிப்பவர்கள் ஆகியோரே எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் 'வாய்சஸ் ஃப்ரம் சிரியா 2018' (Voices from Syria 2018) எனும் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

தங்களுடன் தொடர்பில்லாத மூன்றாம் நபர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மூலம் மட்டுமே உதவிப் பொருட்களை வழங்க முடியும் என்பதால், சில தொண்டு அமைப்புகள் பெண்கள் மீதான இந்த சுரண்டல்களைக் கண்டுகொள்வதில்லை. தெற்கு சிரியாவுக்கு நிவாரணம் சென்று சேர வேண்டும் எனும் நோக்கத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டல்களை தொண்டு அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. அவை ஏழு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் பலவற்றிலும் மனிதாபிமான உதவிகளுக்காக பெண்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்க பணிக்கப்படுவதாக ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 

சிரியாவின் அஃப்ரின் பகுதியில் துருக்கி படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அப்பகுதியில் கடந்த ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 21 ஆகிய நாட்களில் துருக்கி நடத்திய தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 93 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று குர்து செஞ்சிலுவைச் சங்கமும் கூறியுள்ளது.

சிரியாவில் 30 நாட்கள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு அவை கடந்த சனிக்கிழமையன்று வாக்களித்த பின்னர், போர் நடைபெறும் பகுதிகளில் இன்னும் நிவாரணம் மற்றும் உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை நிரப்பிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பத்து பகுதிகளுக்குள் நுழைய சரக்கு வாகனங்கள் சனிக்கிழமை முதலே காத்திருப்பதாகவும், அப்பகுதிகளில் சண்டை இன்னும் நீடிப்பதால் அவற்றை தேவைப்படுபவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்றும் ஐ.நாவின் அவசரகால உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மார்க் லோகாக் கூறியுள்ளார். சிரியாவில் சண்டை நிறுத்தம் எப்போது அமலுக்கு வரும் என்றும் அவர் பாதுகாப்பு அவையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதவிப் பொருட்களை வழங்குவதறகாக தினமும் ஐந்து மணிநேரம் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளலாம் என்று சிரியா அரசுக்கு ஆதரவாக போரிட்டு வரும் ரஷ்யா ஏற்கனவே கூறியுள்ளது.

ரஷ்யா கூறும் ஐந்து மணிநேர சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கவும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், அந்த நேரம் போதாது என்று மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாக உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. இதனால், ஸ்ரீதேவி மது அருந்தியதால் நிலைதடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 22-ம் தேதி துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா  திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார். ஸ்ரீதேவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கை கிடைக்காததால் அவரது உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
 
இந்நிலையில், இன்று பிற்பகல் அவரது தடயவியல் அறிக்கை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆனால், நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியதால் நிலைதடுமாறி குளியல் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கியதாகவும், அதனால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீ தேவியின் உடல் எப்போது துபாயில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் என துல்லியமான தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும், எம்பாமிங் முடிந்த பிறகு, பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு ஸ்ரீ தேவியின் உடல் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.

Pityful a rethoric question ran over her cheek When she reached thre first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.

Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.

The Big Oxmox advised her not to do so, because there were thousands of bad Commas, wild Question but the Text didn’t listen her seven versalia, put her initial into.

Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean. A small river named Duden flows by their place and supplies it with the necessary regelialia. It is a paradisematic country, in which roasted parts of sentences fly into your mouth.

Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.

Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.

Page 1 of 3

Latest Tweets

Finances, Business and Insurance WordPress Theme https://t.co/CW1sfG3oYW https://t.co/LC5rl7lml9
News247 Joomla Template on Sale! https://t.co/Oa795OwRJw https://t.co/qvtPaicA0Q
News247 News/Magazine WP theme 350 sells on #Themeforest https://t.co/z2picFBdkt https://t.co/ZG1QH626qA
Follow Themewinter on Twitter