Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - துப்பாக்கிச்சூட்டுக்கு பொதுமக்கள் 9 பேர் பலி Featured

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாட்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, டி.ஐ.ஜி கபில் குமார் சாரட்கர் தலைமையில், 3 மாவட்டப் போலீஸார் தூத்துக்குடியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால், போலீஸாரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசிய போதிலும், கலைந்து செல்லாத கூட்டத்தினர், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தே சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள், அலுவலக முகப்பில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர்.

இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், திண்டுக்கல், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு 10 கம்பெனி போலீசார் விரைந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இன்று 100 வது நாள் போரட்டம். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் தாக்கினர்.

தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருப்பதால், தூத்துக்குடியில் பதற்றம் அதிகரித்துவருகிறது. இதனிடையே, போலீஸார் தாக்கியதிலும் துப்பாக்கிச் சூட்டிலும் பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல் துறையினரும் காயம் அடைந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 200 இருசக்கர வாகனங்கள், 20 துறைகள் சம்பந்தப்பட்ட வாகனங்களை எரித்த போராட்டக்காரர்கள், அருகில் இருந்த ஸ்டெர்லைட் குடியிருப்பில் புகுந்தனர். அங்கிருந்த வாகனங்களை அவர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுவரைக்கும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  பலர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரும் என்ற அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில், போராட்டக்காரர் 9 பேர் பலியானதால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

 
 
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 22 May 2018 16:42
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

தற்போதைய நிகழ்வுகள்

ட்வீட்டுகள்

SeoBin | Marketing Agency HTML Template updated with 2 new home https://t.co/mxLG1wKFPc https://t.co/w4arzHoAVx
RT @dhh: MailChimp is an inspiration! $300M+/year in revenues, profitable, based in Atlanta, NO VC. Wonderful. 🐒❤️ https://t.co/qmj0MNAQOo
Barrister - Responsive Law Business @joomla Template setup guide! https://t.co/GwqHcdxyDi https://t.co/qzEEldYie3
Follow Themewinter on Twitter

கேலரி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை - துப்பாக்கிச்சூட்டுக்கு பொதுமக்கள் 9 பேர் பலி

சிரியா - உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்

சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பொதுமக்கள் பலி

சிரியாவில் இன்னும் உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியவில்லை - ஐ.நா

ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் - தடயவியல் அறிக்கையில் தகவல்

Netcix cuts out the chill with an integrated personal trainer on running

Hynopedia helps female travelers find health care in Maldivs

Here's how to make Kevin's famous fish cutlet from 'The Office'